08 Dec 2017

Christmas Carol Programme (கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வு)

கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வு

கிழக்குப் பல்கலைக் கழக  ஊழியர்களின் கிறிஸ்தவ  சங்கத்தினரால் வருடா வருடம் தேவை   நிலையில் உள்ள  பாடசாலை  மாணவர்களை மகிழ்விக்கும் நோக்குடன் நடாத்தப்படும்  கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வானது இம்முறை மட்/பெரியபுல்லுமலை, றோ.க.த.க. பாடசாலையில், பாடசாலை அதிபர் திரு. பிரியகாந்த் தலைமையில்  இடம்பெற்றது. இதில்  அருட்திரு.A.  நவரெட்ணம் அவர்கள் கௌரவ அதிதியாகவும், கிழக்குப்  பல்கலைக் கழகத்தின் பிரதி உபவேந்தர் வைத்ய கலாநிதி K.E.கருணாகரன் அவர்கள் விசேட  அதிதியாகவும்,  பிரதி பதிவாளர் திரு. A.பகிரதன் , உதவி நிதியாளர் திரு. S.பிரம்மாகரன்   மற்றும்  கிழக்குப் பல்கலை கழகத்தின் ஊழியர் சங்க தலைவர் திரு. இரா.இராஜசேகரம் ஆகியோர்    அதிதிகளாகவும்     கலந்து சிறப்பித்தனர்.  இந்த நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களினதும்  பாடசாலை மாணவர்களினதும் கிறிஸ்து பிறப்பினை ஒட்டிய நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. நிகழ்வின் இறுதியில் பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெறுமதிமிக்க பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.  இதட்கான பங்களிப்பினை கிழக்குப் பல்கலைக்கழக கல்விசார் கிறிஸ்தவ விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா கிறிஸ்தவ ஊழியர்கள், கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர்  மற்றும்  கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புபட்ட நலன்  விரும்பிகள் வழங்கி இருந்தமைக்கு நன்றி சொல்லப்படுகின்றனர்  . இவ்வாறான ஒரு கிறிஸ்துவின் அன்பை பகிரும் நிகழ்வினை கிழக்குப் பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் கிறிஸ்தவ  சங்க தலைவி திருமதி. A.வி. வரதராஜன் அவர்கள் ஒருங்கமைத்து நடாத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

Read 1949 times Last modified on Thursday, 18 January 2018 10:33
JoomShaper