Master of Arts (M.A) - 2024/2025
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
பட்டப்பின் கற்கைகள் பீடம்
முதுமாணிக் கற்கை நெறி - 2024/2025
Master of Arts (M.A) - 2024/2025
முதுமாணிக் கற்கை நெறியின் விண்ணப்பபடிவத்திற்கான கால நீடிப்பு
கிழக்குப் பல்கலைக்கழக பட்டப்பின் கற்கைகள் பீடத்தின் முதுமாணிக் கற்கை (தமிழ், நுண்கலை, நாடகமும் அரங்கியலும் மற்றும் புவியியல்) நெறியின் விண்ணப்பங்களுக்கான காலம் நீடிக்கப்பட்டள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக பட்டப்பின் கற்கைகள் பீடத்தின் முதுமாணிக் கற்கை (தமிழ், நுண்கலை, நாடகமும் அரங்கியலும் மற்றும் புவியியல்) நெறிக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
அனுமதிக்கான தகைமைகள் :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் விண்ணப்பிக்கும் பாடத்தில் பெறப்பட்ட சிறப்புக் கலைமாணிப்பட்டம்
அல்லது,
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் பெறப்பட்ட விண்ணப்பிக்கும் பாடத்தை உள்ளடக்கிய வகுப்புச் சித்தியுடனான பொதுக் கலைமாணிப்பட்டம்.
குறிப்பு :
விண்ணப்பிக்கும் பாடத்தை உள்ளடக்கிய பொதுகலைமாணிப் பட்டத்தில் வகுப்புச்சித்தி இல்லாதவர்கள் பட்டப்பின் கற்கைகள் பீடத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண் பரீட்சையில் சித்தி பெற வேண்டும்.
- தெரிவு முறை : தகுதிகாண் பரீட்சையும், நேர்முகப் பரீட்சையும்
- பாடநெறிக்கட்டணம் : ரூபா 170,000.00
- காலம் : 1 வருடம் (முழு நேரக் கற்கை நெறி)
- விண்ணப்ப முடிவுத்திகதி :
31.08.202431.03.2025 - மொழி மூலம் : தமிழ் /ஆங்கிலம்
குறிப்பு :
- புவியியல் பாட நெறி மாத்திரம் தமிழ் மொழி மூலமும், ஆங்கில மொழி மூலமும் கற்பிக்கப்படும்.
பின்வரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் ரூ.3000.00 ஐ நிதியாளர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணக்கிலக்கம் 227100190000390 மக்கள் வங்கி செங்கலடியில் வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டுடன் 9” X 6” அளவுடைய ரூபா 110.00 இற்கான முத்திரை ஒட்டப்பட்டு சுய விலாசமிடப்பட்ட கடித உறையையும் இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் / பட்டப்பின் கற்கைகள் பீடம் , கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி எனும் முகவரிக்கு 31.08.2024 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். மேலதிக விபரங்களுக்கும், விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்வதற்கும் கிழக்குப் பல்கலைக்கழகம், பட்டப்பின் கற்கைகள் பீட இணையத்தளத்தினை பார்வையிடவும். (https:/www.esn.ac.lk )
பதிவாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை,
வந்தாறுமூலை,
செங்கலடி.